கட்சி மற்றும் அரசு வாரியங்களின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய முக்கியக் கட்டுரை ஜுலை 16ஆம் நாள் ஜியூஷி எனும் இதழில் வெளியிடப்பட உள்ளது.
கட்சி மற்றும் அரசு வாரியங்களின் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாட்டின் குறிக்கோளை நடைமுறைப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையும், நாட்டின் நிர்வாக முறைமை மற்றும் திறனின் நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான ஏற்பாடும் ஆகும். இந்தச் சீர்திருத்தம் முறைமை சார் சிக்கலான பணியாகும். இதற்காக, புதிய கடமை, ஏற்பாடு மற்றும் தேவைக்கிணங்க, கட்சி மற்றும் அரசு வாரியங்களின் செயல்பாட்டு அமைப்புமுறையைத் தொடர்ந்து சீராக்கி, அவற்றைக் கட்சி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.