2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது; நாங்கள் தனியேப் போட்டியிடப் போகிறோம்” என்று சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான ‘டிவிகே’ உடன் ஒத்துழைப்பு வதந்திகள் குறித்து, “கூட்டணியும், கூட்டிப் போவதும் எதுவும் இல்லை; “நான் செத்து சாம்பலானாலும் 2026-ல் தனித்து தான் போட்டி, நாங்கள் தனியாதான் போவோம்” என வலியுறுத்தினார். “எனக்கு வாக்கு குறையும், கட்சி கலைந்து விடும்” என்ற அனைத்தையும் அவர் கடுமையாகக் கண்டித்ததுடன், “நான் மக்களுக்கானவன்; என் வெற்றி–தோல்வி மக்களின் தீர்ப்பு” என்று தெரிவித்தார்.
கருத்துக்கணிப்புகளை சுட்டிக்காட்டி, “ஒரு தொலைக்காட்சி இன்று 5%, நாளை 4% என்று சொல்கிறது; தேர்தல் முடிந்ததும் எக்சிட் போல்களில் வேறு எண்கள் காட்டுகிறார்கள்—இவை நிஜ நிலையை பிரதிபலிக்கவில்லை” என ஊடகங்களை சீமான் கடுமையாக விமர்சித்தார்.
#WATCH | “நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும்” – சீமான்#SunNews | #Seeman | #NTK | #Election26 pic.twitter.com/CA8Up9VPva
— Sun News (@sunnewstamil) August 11, 2025
“>
தவறான தகவல்கள் பரப்புகின்றனர் மேலும் அவர், “பேச்சு, ஊகம் வேண்டாம்; நம்ம பாட்டு மக்களுக்காக வேலை செய்வதுதான்” என்று கூறி, தரைமட்டப் பணிகளை பலப்படுத்தி, கொள்கை–வாக்குறுதிகளை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லப் போவதாக தெரிவித்தார்.