நவம்பர் 29ஆம் தேதி தமிழகத்தின் 29 வட மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’  

Estimated read time 1 min read

குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இது இன்று வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இந்த நிகழ்வு தொடர்ந்து சென்னை, வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இதனால் நவம்பர் 29 ஆம் தேதி தமிழகத்தின் 29 வட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

You May Also Like

More From Author