தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சில மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மதியம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாளை கடலூர் மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திற்கும் மழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
