திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி மலை மீது கொப்பரை எடுத்து செல்லப்பட்டது.
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினந்தோறும் பஞ்சமூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நாளை கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்படும் நிலையில் நான்கு மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டு அதன் பின்பு மாலை 6 மணி அளவில் 2 ஆயிரத்து 668 அடி உயரம் உள்ள மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.
இதன் காரணமாக சிறப்பு பூஜை செய்யப்பட்டு 300 கிலோ எடை கொண்ட மகா தீப கொப்பரை மலை மீது எடுத்து செல்லப்பட்டது.
