சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 3ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பரோட் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில்,
பிரெஞ்சு அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் சீனாவில் 4ஆவது அரசு முறை பயணம் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன் ஒன்றுக்கு ஒன்று, நெடுநோக்கு நம்பிக்கையை வலுப்படுத்தி, நெடுநோக்கு ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, சீன-பிரெஞ்சு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவின் வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றலை இப்பயணம் கொண்டு வரும் என நம்புவதாக தெரிவித்தார்.
ஜப்பானின் நடப்பு தலைவர் தைவான் பிரச்சினை குறித்த தவறான கூற்றுகளின் சாராம்சம் மற்றும் கடுமையான தீங்குகள், சீனாவின் கோட்பாடு மற்றும் நிலைப்பாடு முதலியவற்றை வாங்யீ விளக்கிக்கூறினார். தைவான் பிரச்சினை என்ற சாக்குப்போக்கில் ஜப்பானின் ஆத்திரமூட்டமிட்டும் செயலை அனுமதிக்காது என்று வாங்யீ வலியுறுத்தினார்.
பரோட் கூறுகையில்,
சீனாவுடனான உறவில் இம்மானுவேல் மக்ரோன் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றார். குறிப்பாக, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடனான ஆழ்ந்த நட்புறவை சிறப்பாகப் பேணிக்காத்து வருகின்றார். ஒரே சீனா எனும் கொள்கையில் பிரான்ஸ் உறுதியாக ஊன்றி நிற்கிறது என்றார்.
