அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்ட கானா அரசுத் தலைவர் ஜான் திராமணி மஹாமா, சீனாவின் சி.ஜி.டி.என்.க்கு பேட்டி அளித்தார். உள்கட்டமைப்பு கட்டுமானம், தொழில் பயிற்சி உட்பட துறைகளில் கானாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் சீனா ஆதரவு அளிப்பது தொடர்பான கேள்விக்கு மஹாமா பதிலளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு மற்றும் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் கீழ், மாற்றத்தை ஏற்படுத்தும் பல முக்கியமான அடிப்படை வசதிகளின் திட்டங்கள் ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. சீனாவின் முதலீட்டுடன், கானாவின் முதலாவது இயற்கை எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலை அடுவாபோவில் கட்டப்பட்டுள்ளது. கானாவின் தலைநகர் அக்ராவுக்கு தினமும் சுமார் 4கோடி கேலன் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கப்படுகின்றது. குடிநீரை சுத்திகரிக்கும் தொழிற்சாலையின் அளவை விரிவாக்க சீனா அளித்த ஆதரவுக்கு நன்றி. உள்கட்டமைப்பு கட்டுமானத் துறையில், சீனா எப்போதும் எங்கள் ஒத்துழைப்புக் கூட்டாளியாக திகழ்கின்றது என்று தெரிவித்தார்.
