சீனத் தேசிய புள்ளிவிவரப் பணியகம் 15ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, நவம்பர் மாதத்தில் சீனாவின் உற்பத்தி மற்றும் விநியோகமும், வேலை வாய்ப்பு நிலைமையும் நிலையாக இருந்ததோடு, பொருளாதார வளர்ச்சிப் போக்கு நிதானமாக வளர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூடுதல் மதிப்பு கடந்த ஆண்டை விட, 4.8விழுக்காடு அதிகரித்துள்ளது. சமூக நுகர்வுப் பொருட்களின் சில்லறை விற்பனைத் தொகை 4.0விழுக்காடு அதிகரித்துள்ளது. தயாரிப்புத் தொழலின் முதலீட்டு அதிகரிப்பு 1.9விழுகாட்டை எட்டியுள்ளது. நாடளவில் நகரப்புறங்களின் வேலையில்லாத விகிதம் 5.1விழுக்காடாகும். அடுத்த கட்டத்தில் மேலும் ஆக்கப்பூர்வமான பயனுள்ள ஒட்டுமொத்த கொள்கைகளைச் செயல்படுத்தவுள்ளதாக இப்பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபுலின்ஹூய் அறிமுகப்படுத்தினார்.
நவம்பரில் நிதானமாக வளர்ந்துள்ள சீனப் பொருளாதாரம்
Estimated read time
0 min read
You May Also Like
சீனாவுக்கான புரிந்துணர்வு கூட்டம் நடைபெற்றது
December 1, 2025
எல்லை கடந்த தரவு பரிமாற்ற ஒத்துழைப்பை முன்னேற்ற சீனாவிருப்பம்
November 20, 2024
