உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள டெல்லி-ஆக்ரா விரைவு சாலையில் (யமுனா விரைவுச் சாலை), இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் காரணமாக கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
சுமார் 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் உட்பட மொத்தம் 10 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக சாலை தெளிவாக தெரியாததே இந்த விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மோதலின் விளைவாக, பல வாகனங்களில் தீப்பிடித்து எரிந்தன.
இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்தனர் என்றும், 25 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி தீ விபத்து
