உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு, அவரது விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் விரைவில் பொது பங்கு வெளியீட்டிற்கு (IPO) தயாராகி வருவதன் காரணமாக, வரலாறு காணாத அளவில் 600 பில்லியன் டாலராக (இந்தியா ரூபாய் மதிப்பில் சுமார் ₹48 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது என்று ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு (2026) 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பொதுப் பங்கு வெளியீட்டிற்குச் செல்ல வாய்ப்புள்ளதாக வந்த தகவல்களை தொடர்ந்து, மஸ்க் உலகின் முதல் 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள நபராகியுள்ளார்.
எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலராக உயர்வு
