உலகில் மிக செழுமையான 1 விழுக்காட்டினர்கள், உலகத்தின் 60 விழுக்காடான செல்வங்களைக் கொண்டுள்ளனர். மேலும் மோசமான ஏழை பணக்கார இடைவெளிக்கு சீனா பதிலளித்தது.
சீனாவின் அதிபராக பதவி ஏற்ற பிறகு, ஷி ச்சின்பிங், 8 ஆண்டுகாலத்தில், 10 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபடச் செய்தார். 2020ஆம் ஆண்டில் சீனாவில் வறுமை என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டது. சோஷலிச சீனாவில் அதிக ஏழை பணக்கார இடைவெளியைத் தவிர்க்க வேண்டும். பொது மக்கள் வளர்ச்சி சாதனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைத்து மக்கள் கூட்டாக செழுமையடைய வேண்டும் என்று ஷி ச்சின்பிங் வலியுறுத்தினார். சமூக நியாயத்தை நனவாக்குவதற்கு கூட்டு வளர்ச்சி மிக முக்கியமானது. அமைப்பு முறை வடிவமைப்பின் மூலம், ஏழை பணக்கார இடைவெளியை நீக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
வறுமையை ஒழித்து, செழுமையடைவது, ஒரு சில நாடுகளின் உள் விவகாரங்களாகும் என்பது மட்டுமல்ல, முழு மனிகுலத்தின் கூட்டு அறைகூவலாகும். சீனா மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், 40 ஆண்டுகாலத்தில், மேலை நாடுகள் 200 ஆண்டுகளில் எட்டியுள்ள வறுமை குறைப்பு சாதனைகளை எட்டியுள்ளது. இது உலக நவீனமயமாக்க பாதையை விரிவாக்கியதோடு, உலக நிர்வாக கருத்தை மறுசீரமைப்பதற்கும் மனிதகுல பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியமைப்பதற்கும் பங்காற்றியுள்ளது.
