சீன வினியோக -விற்பனைக் கூட்டுறவுச் சங்கம் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், கடந்த 70 ஆண்டுகளில் வினியோக-விற்பனைக் கூட்டுறவுச் சங்கம் எப்போதும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையப் கடமைகளில் கவனம் செலுத்துகின்றது. ஒட்டுமொத்த நிலைமைக்கு முன்முயற்சியுடன் சேவை செய்கின்றது. நகர மற்றும் கிராமப்புற மக்களுக்குச் சேவை செய்வது, கிராமப்புற பொருளாதாரத்தை வளப்படுத்துவது, வறுமை ஒழிப்புப் பணிக்குத் துணை புரிவது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, மறுமலர்ச்சியை முன்னேற்றுவது ஆகியவற்றில் இச்சங்கம் ஆக்கப்பூர்வமாக பங்காற்றியுள்ளது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், புதிய காலத்தில், இச்சங்கம் புதிய வளர்ச்சி கருத்துக்களை உணர்வுபூர்வமாகச் செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைக்குச் சேவை புரிவதற்கும் நவீன விவசாயத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த மேடையைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும். விவசாய வல்லரசு கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்குப் பங்காற்ற வேண்டும் என்றார்.