சீன ஊடகக் குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிப் பருவம் எனும் பதிப்புரிமைப் பண்பாட்டுப் படைப்பாக்க ஒத்துழைப்பு மற்றும் குதிரை ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான மங்கலப் பொருட்களின் வெளியீட்டு விழா டிசம்பர் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
சீன ஊடகக் குழுமத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் பெங்ஜியென்மிங் இதில் பங்கேற்று உரை நிகழ்த்துகையில், நாட்டின் பண்பாட்டுப் பரவலுக்கு பொறுப்பேற்கும் சீன ஊடகக் குழுமம் எப்போதும் புத்தாக்கத்தில் ஊன்றி நின்று, சிறந்த உள்ளடக்க வளங்களைத் தொழில் சாதனைகளாக மாற்றுவதை இடைவிடாமல் முன்னேற்றி வருகிறது என்றார். மேலும், குதிரை ஆண்டினை முன்னிட்டு பண்பாட்டுப் படைப்பாக்கப் பொருட்கள், பரிசுப் பெட்டி உள்ளிட்ட பல்வகை அம்சங்கள் குதிரை ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சியின் மங்கலப் பொருட்களுள் அடங்கும்.
வசந்த விழா கலை நிகழ்ச்சிப் பருவத்துக்கான மேடையின் கூட்டு கட்டுமானத்தைச் சீன ஊடகக் குழுமம் தொடர்ந்து முன்னேற்றவுள்ளது. மேலதிக கூட்டாளிகள் இதில் பங்கேற்று சீனப் பாரம்பரிய பண்பாட்டை நவ காலத்திற்கேற்ப காட்சிப்படுத்துவதற்கு மேலதிக கற்பனை மற்றும் படைப்பாற்றலை வெளிக்கொணர்வதை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
