சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகம் செப்டம்பர் 8ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில், சீனாவின் சரக்கு வர்த்தகம் நிதானமான அதிகரிப்புப் போக்கினை நிலைநிறுத்தி வருகிறது.
அதன் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 29 லட்சத்து 57 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.5 விழுக்காடு அதிகமாகும்.
இதில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பங்கெடுத்த நாடுகளுக்கான மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 15 லட்சத்து 30 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.4 விழுக்காடு அதிகமாகும். இது சீனாவின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகையில் 51.7 விழுக்காடு வகித்துள்ளது.
மேலும், சிக்கலான வெளிப்புற நிலைமையில், சீனாவின் அன்னிய வர்த்தகத்தின் உயிராற்றல் தொடர்ச்சியாக வெளிக்கொணரப்பட்டு வருகிறது என்று சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியகத்தின் புள்ளிவிவர ஆய்வுப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.