2025 ஆம் ஆண்டு காலநிலை வளப் பொருளாதார நீல அறிக்கை – சீனக் காலநிலை வளங்களின் பொருளாதார மாற்றத்துக்கான ஆய்வறிக்கையானது 25ஆம் நாள் சீன வானிலை பணியகத்தால் வெளியிடப்பட்டது. காலநிலை வளப் பொருளாதாரம் பற்றிய சீனாவின் முதலாவது நீல அறிக்கை இதுவாகும். நாட்டின் காலநிலை வளங்கள் பொருளாதாரத் துறைகளிலுள்ள பயன்பாட்டு நிலைமை அதில் பதிவிடப்பட்டுள்ளது.
வேளாண்மை, எரியாற்றல், சுற்றுலா, நலவாழ்வு மற்றும் பராமரிப்பு, குறைந்த கார்பன் முதலிய துறைகள் சார்ந்த தத்துவ ஆய்வு மற்றும் நடைமுறைகளை ஒருங்கிணைத்து காலநிலை வளங்களின் உயர் தர மாற்றம், அறிவியல் ஆய்வு, தொழில் புத்தாக்கம், மற்றும் காலநிலை மேலாண்மை உள்ளிட்டவற்றுக்குரிய அறிவியல் ஆதாரத்தை இந்நீல அறிக்கை வழங்கும்.
