மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சன் ஹோ ஹுய், தனது பணிகள் குறித்து வழங்கிய அறிக்கையை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ம் நாள் பெய்ஜிங்கில் கேட்டறிந்தார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சன் ஹோ ஹுய் தலைமையிலுள்ள மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிக்காத்து, 8வது ஹாங்காங் சட்டமியற்றல் அவையின் தேர்தலை நடத்தி, குவாங்டுங்-ஹாங்காங்-மக்கொ பெரிய வளைகுடா பகுதியின் கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு பல்வேறு முன்னேற்றங்களைப் பெற்றுள்ளது. சன் ஹோ ஹுய் மற்றும் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் பணிகளை மத்திய அரசு பாராட்டுகிறது என்று தெரிவித்தார்.
மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு, நாட்டின் 15வது ஐந்தாண்டுகால திட்டத்துடன் ஒன்றிணைந்து, பொருளாதாரத்தின் பல்வகை வளர்ச்சியை முன்னெடுத்து, நிர்வாகப் பணி பயனை இடைவிடாமல் உயர்த்தி, தேசிய வளர்ச்சி அமைப்புக்கு மேலதிக பங்கு ஆற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
