துபாயின் மறுபக்கம் இதுதான்… அதிகாலை 4.45 க்கு வேலைக்கு செல்லும் இந்திய தொழிலாளர்கள்… வைரலாகும் வீடியோ…!!! 

Estimated read time 1 min read

விடியற்காலை 4.45 மணிக்கே புலம்பெயர் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பேருந்துகளில் ஏறும் காட்சியை துபாயில் வசிக்கும் சவுகான் என்ற இந்தியர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

துபாயின் நிலைமை இதுதான் என்ற கருத்துடன் வெளியிடப்பட்ட இந்த காணொளியில் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்த தொழிலாளர்கள் சூரிய உதயத்திற்கு முன்பே தங்களின் தங்குமிடங்களில் இருந்து பணிக்குச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காணொளி இணையத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் குடும்பத்தையும் தாய்நாட்டையும் பிரிந்து வெளிநாடுகளில் கடினமாக உழைக்கும் மக்களின் தியாகத்தை இது உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பணத்தை விட குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதே மகிழ்ச்சி என்றும் இந்தியாவில் வசதிகள் குறித்து குறை கூறுபவர்கள் இந்த எதார்த்த நிலையை உணர வேண்டும் என்றும் பயனர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author