ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்தாண்டு டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்தியா வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயம், இந்தியா-ரஷ்யா இருநாட்டு உறவுகளுக்கு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைகள், குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் தொடர்பான 50% வரி விதிப்பு, இந்தியாவை சிக்கலுக்குள் தள்ளிய நிலையில், மத்திய அரசு புதிய மாற்று வழிகளை தேடி வருகிறது.
இந்திய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பிற நாடுகளுடன் வணிக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியாவின் நெருக்கம் மேலும் வலுப்பெறும் நிலையில், புடினின் இந்தியப் பயணம் அதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புடின் -இருநாட்டு உறவுக்கு புதிய உத்வேகம்!
