உலகப் புகழ்பெற்ற பாரிஸ் நகரிலுள்ள லூவர் அருங்காட்சியகம், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) அன்று கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவானதைத் தொடர்ந்து திடீரென மூடப்பட்டது.
பிரெஞ்சு கலாச்சாரத் துறை அமைச்சர் ராச்சிதா தாதி இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
அருங்காட்சியகம் திறக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிகாலையிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்தார்.
லூவர் அருங்காட்சியகம், அசாதாரண காரணங்களுக்காக ஒரு நாள் முழுவதும் மூடப்படுவதாக அறிவித்தது.
இருப்பினும், கொள்ளையடிக்கப்பட்ட குறிப்பிட்ட பொருட்கள் அல்லது பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு குறித்து அருங்காட்சியக நிர்வாகம் உடனடியாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
உலகப் புகழ்பெற்ற பாரிஸ் லூவர் அருங்காட்சியகம் கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து மூடல்
