சீனாவின் ஜியாங் ஷி மாநிலத்தின் ஷின்யூ நகரிலுள்ள ஒரு சாலையோர கடையில் ஜனவரி 24ம் நாள் மாலை மூன்றரை மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதுவரை இவ்விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர். இன்னும் சிலர் விபத்து பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்விபத்தில் கவனம் செலுத்திய அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், விடா முயற்சியுடன் காயமுற்றோருக்கு சிகிச்சை அளித்து, உயிரிழந்தோரின் குடும்பங்கள் தொடர்புடைய பணிகளை நன்கு செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.
மேலும், பல்வேறு நிலை பிரிவுகளும் படிப்பினையைப் பெற்று, மறைமுகமான அபாயங்களை நீக்கி, மக்களின் உயிர் உடைமை பாதுகாப்பு மற்றும் சமூக நிதானத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.