சீன மற்றும் தென் கொரிய அரசுத் தலைவர்களின் மனைவிகளின் தேனீர் உரை

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவரின் மனைவி பெங் லீயுவன் அம்மையார், பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரிய அரசுத் தலைவரின் மனைவி கிம் ஹே-கியுங் அம்மையாருடன் 5ஆம் நாள் பிற்பகல் தேனீர் உரை நிகழ்த்தினார்.

புத்தாண்டின் துவக்கத்தில், தென் கொரிய அரசுத் தலைவர் லீ ஜே-ம்யுங்குடன் சேர்ந்து சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள கிம் ஹே-கியுங், பெங் லீயுவன் வரவேற்றார்.

அப்போது அவர், சீனாவும் தென் கொரியாவும் அண்டை நாடுகளாகும். இரு நாடுகளின் மக்கள் அடிக்கடி தொடர்பு மேகொண்டு, கூட்டு புரிந்துணர்வை அதிகரிக்க வேண்டும். சமூக பொது நல பணியில் ஈடுபடும் கிம் ஹே-கியுங்கிற்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், மகளிர் மற்றும் குழந்தைகளின் நலன் உத்தரவாதப் பணியை கிம் ஹே-கியுங் விரைவுபடுத்தி வருகின்றார். இரு தரப்பினரும் பயனுள்ள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாக பெங் லீயுவன் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.

பெங் லீயுவன் அம்மையாரின் உபசரிப்பு மற்றும் இனிமையான ஏற்பாடுகளுக்கு கிம் ஹே-கியுங் நன்றி தெரிவித்தார். மகளிர் மற்றும் குழந்தைகளின் இலட்சியத்திற்கு பெங் லீயுவன் நீண்டகாலமாக பங்காற்றுவதற்கு கிம் ஹே-கியுங் மதிப்பளித்தார். தென் கொரிய மற்றும் சீன மக்களின் தொடர்புகளை வலுப்படுத்தி, இரு நாடுகளின் நட்புறவை அதிகரிப்பதற்கு பங்காற்ற விரும்புவதாக கிம் ஹே-கியுங் விருப்பம் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author