சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2025ஆம் ஆண்டின் முக்கிய பணிகளை வெளியிட்டுள்ளது.
நவீன தொழில் அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது, தொழில்துறைக்கான 1800 வரையறைகளை வகுப்பது, புதிய தொழில்துறை மற்றும் எதிர்கால தொழில்துறையின் வரையறை வகுப்பதற்கான 5க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளை உருவாக்குவது முதலியவை அவற்றில் அடங்கும்.
திட்டங்களின்படி, மேகக் கணிமை, பெருந்தரவு, பிளாக்செயின், பெய்தாவ் புவியிடங்காட்டி உள்ளிட்ட புதிய தலைமுறை தகவல் தொழில்நுட்ப வரையறைகளைச் சீனா முழுமைப்படுத்தும்.
குறைந்த உயரத்தில் பறக்கும் துறைகள், பெரிய விமானத் தயாரிப்பு உள்ளிட்ட பயணியர் விமானத் துறையின் வரையறை அமைப்பு முறையை உருவாக்கவுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
