சீனா முன்மொழிந்த உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவுக்கு நைஜீரியா ஆதரவு அளிக்கின்றது. சர்வதேச அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்கு இது பங்காற்றியுள்ளதாக நைஜீரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் 11ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவில் வலுப்படுத்தப்பட்ட இறையாண்மை சமநிலை, சர்வதேச நீதியைப் பின்பற்றுவது, பலதரப்புவாதத்தை நடைமுறைப்படுத்துவது, மனிதர்களே முதன்மை, நடவடிக்கை மேற்கொள்வதில் கவனம் செலுத்துவது ஆகியவற்றிற்கு நைஜீரியா வரவேற்பு தெரிவித்தது. நைஜீரியாவின் வளர்ச்சி இலக்கு, நெடுநோக்கு தன்னாட்சி கோட்பாடு, ஆப்பிரிக்க லீக்கின் 2063 திட்டம் ஆகியவற்றுக்கு இது ஏற்ரதாக உள்ளது என்றும் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.