ஜுன் 26ஆம் நாள் தியான்ஜினில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு கோடைகால தாவோஸ் மன்றக்கூட்டத்தின் தொழில் மற்றும் வணிக துறைப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் பங்கெடுத்தார்.
அப்போது லீ ச்சியாங் கூறுகையில், நிலையான முன்னேற்றம் வாய்ந்த அடிப்படை நிலைமை, ஆக்கப்பூர்வமான ஒட்டுமொத்த கொள்கை, சந்தை மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்கு ஆகிய காரணங்களாக, சீனப் பொருளாதாரம் சீராக அதிகரித்து வருகிறது.
இதில், அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. அத்துடன், அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சீனா அதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றார்.
30க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 160 தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் மீது, அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் அதிக நம்பிக்கை கொண்டு, தொடர்ந்து சீனச் சந்தையில் வளர்ச்சியடையும் என்று பிரதிநிதிகள் தெரிவித்தனர்.