ஆக்ஸ்ட் 24ம் நாள் ஜோஹன்னெஸ்பர்கில் பிரிக்ஸ் நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகள், புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஆகியவற்றின் தலைவர்களுக்குமிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உரைநிகழ்த்துகையில், வளர்ச்சி என்பது, வளரும் நாடுகளின் முதன்மை பணியாகும். சர்வதேச சமூகம், வளர்ச்சியை, சர்வதேச நிகழ்ச்சி நிரலில் மீட்டெடுத்து, உலக மேலாண்மையில் வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமையை உயர்த்த வேண்டும்.
உண்மையான பலதரப்புவாதத்துக்கு ஆதரவளித்து, உலகளாவிய கூட்டாளியுறவை உருவாக்கி, கூட்டு வளர்ச்சிக்கு அமைதியான மற்றும் நிலையான சர்வதேச சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அடுத்த கட்டத்தில், சீனா, ஆப்பிரிக்க நாடுகளுடன் பல்வகை ஒத்துழைப்பை அதிகரித்து, ஆப்பிரிக்காவின் தற்சார்ப்பு ஆய்வு திறன் உயர்வுக்கும், ஆப்பிரிக்க தொடரவல்ல வளர்ச்சிக்கும் ஆதரவு அளிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் தலைமை தாங்கிய இப்பேச்சுவார்த்தையில், சீனா, இந்தியா, பிரேசில், ரஷியா ஆகிய நாடுகளின் தலைவர்களும், ஆப்பிரிக்க நாடுகள் புதிய சந்தை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 தலைவர்களும் பிரதிநிதிகளும், ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.