ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஈரானிய அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைகளுக்கு மத்தியில், போராட்டக்காரர்களுக்கு “உதவி விரைவில் வரும்” என்று அவர் கூறியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில், ஈரானிய தேசப்பற்றாளர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றும், அரசு நிறுவனங்களைக் கைப்பற்ற வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
“உதவி வரும்” என்று அவர் குறிப்பிட்டது எத்தகைய நடவடிக்கையைக் குறிக்கிறது என்ற கேள்விக்கு, “விரைவில் அதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள்” என்று மர்மமான முறையில் பதிலளித்துள்ளார்.
ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்த அதிபர் டிரம்ப்
