டெல்லியில் நாளை கூடுகிறது தேர்தல் ஆணையம்.. தமிழக தேர்தல் எப்போது? …மாஸ் அப்டேட்..!! 

Estimated read time 1 min read

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ள நிலையில், நாளை டெல்லியில் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான ஆலோசனையை நடத்தவுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அட்டவணையை வெளியிடுவது குறித்து இந்தச் சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக, தமிழகத்தில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்றும், மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author