ஸீவீடன் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்ற புதிய சுற்று சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை சீன வணிகத் துறையின் சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியும் துணை அமைச்சருமான லீசெங்காங் 29ஆம் நாள் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
புதிய சுற்று சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட பொது கருத்துகளின்படி, அமெரிக்காவின் 24 சதவீத பரஸ்பர சுங்க வரி மற்றும் சீனத் தரப்பின் எதிர்ப்பு நடவடிக்கைகளின் இடை நிறுத்தத்தை நீட்டிக்க சீனாவும் அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும்.
நிலையான மற்றும் சீரான சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவை பேணிக்காக்கும் முக்கியத்துவத்தை இரு தரப்பும் முழுமையாக புரிந்துகொண்டு, தொடர்ந்து நெருக்கமாகத் தொடர்புகொண்டு, பொருளாதாரம் மற்றும் வர்த்தம் குறித்து, உரிய நேரத்தில் கருத்துக்களைப் பரிமாறிகொள்ளும். தவிரவும், இரு தரப்புகளுக்கிடையில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் தொடர்ச்சியான சீரான வளர்ச்சியையும் இரு தரப்பும் முன்னெடுக்கும் என்றார்.