சென்னையில்nபோக்குவரத்து மாற்றங்களை போலீசார் அறிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு;
* திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா.சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.
* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்.
* ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும் போது மசூதி பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாராயணகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.
* ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழாவில், முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான ஆர். வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் 10,000 [மேலும்…]
சென்னை : தேனியில் அளித்த சிறப்பு பேட்டியில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் [மேலும்…]
நாட்டின் 77வது குடியரசு தின விழா, சீனாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சீனாவின் வணிகத் தலைநகரான ஷாங்காயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் [மேலும்…]
மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. தற்போது கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு தொழில்துறை [மேலும்…]
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 26-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது [மேலும்…]