பிரதமர் அலுவலகம் இடமாற்றம்: ‘சேவா தீர்த்’, ‘கர்த்தவ்ய பவன்’ வளாகங்களை பிரதமர் திறந்துவைக்கிறார்  

Estimated read time 1 min read

சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக, இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் (PMO) பிரிட்டிஷ் காலத்து தெற்கு பிளாக்கிலிருந்து, அதிநவீன வசதிகள் கொண்ட ‘சேவா தீர்த்’ வளாகத்திற்கு இன்று மாற்றப்பட்டது.

டெல்லி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1:30 மணிக்கு திறந்து வைத்தார்.
நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகிய மூன்று முக்கிய அமைப்புகளும் ஒரே இடத்தில் செயல்பட உள்ளன.

You May Also Like

More From Author