தமிழக அரசின் கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்விக்கு எவ்விதத் தொய்வும் ஏற்படாமல் இருக்க, இந்தப் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு 2025-2026 கல்வியாண்டில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.
இது தவிர, மாணவர்களின் தேவைக்கேற்ப பல்வேறு பாடப்பிரிவுகளில் 15,000 க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும் உருவாக்கப்பட்டன.
இந்த மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க, நிரந்தரப் பேராசிரியர் நியமனம் செய்யப்படும் வரை, தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
தமிழக அரசு கல்லூரிகளுக்கு 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்
