சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் சொங்சிங் மாநகரில் ஏப்ரல் 22ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரை ஆய்ரவுப் பயணம் மேற்கொண்டார்.
சொங்சிங் மாநகரில் சர்வதேசச் சரக்குப் போக்குவரத்து மையம், ஜியுலோங்போ மாவட்டத்தின் மிஞ்சு கிராமக் குடியிருப்புப் பகுதி, சொங்சிங் நகரில் எண்ணியல் நகரச் செயல்பாடு மற்றும் நிர்வாக மையம் ஆகிய பகுதிகளில் அவர் பயணம் மேற்கொண்டார்.
சீனாவின் மேற்கு பகுதிகளில் புதிய தரை-கடல் பாதையின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது, நகர்ப்புற சீரமைப்பை நடைமுறைப்படுத்துவது மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற நிர்வாகத்தின் நவீனமயமாக்க நிலை ஆகியவை குறித்து அவர் அறிந்து கொண்டார்.