முன்னாள் ராணுவத் தளபதியின் புத்தகம் குறித்த சர்ச்சைக்கு பின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது  

Estimated read time 1 min read

முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணேவின் நினைவுக்குறிப்புகளை (Memoir) ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மேற்கோள் காட்டியது தொடர்பாக தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடுகிறது.
இந்த சர்ச்சை தொடர்பாக இன்றும் பரபரப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் உரையை தொடங்கிய உடனே, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ராகுலின் பேச்சை தடுத்தனர்.
“வெளியிடப்படாத ஒரு புத்தகத்தையோ அல்லது உறுதிப்படுத்தப்படாத செய்திகளையோ அவையில் மேற்கோள் காட்டக் கூடாது” (விதி 349) என்று அவர்கள் வாதிட்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author