செப்டம்பர் முதல் நாள் நடத்தப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிளஸ் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவை முதன்முறையாக முன்வைத்தார். சர்வதேச சமூகம் இதில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது.
தற்போது, அமைதி, வளர்ச்சி, ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவற்றைக் கொண்ட கால ஓட்டம் மாறாது. ஆனால், மேலும் சிக்கலான உலகளாவிய அறைக்கூவல்களை மனித குலம் எதிர்கொள்கிறது. ஷி ச்சின்பிங் முன்வைத்த இந்த முன்மொழிவில், இறையாண்மையை சமமாக கருதுவது, சர்வதேச சட்ட ஒழுங்கைப் பின்பற்றுவது, பலதரப்புவாதத்தைச் செயல்படுத்துவது, மனிதர்களே முதன்மை, நடைமுறை பயன்களில் முக்கியத்துவம் அளிப்பது முதலிய அம்சங்கள் இடம் பெற்றன. இவை, ஐநா சாசனத்தின் குறிக்கோள்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பொது எதிர்பார்ப்புகளுக்கு பொருந்தியதாக உள்ளன.
உலகளவில் மிகப் பெரிய மண்டல அமைப்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட 24 ஆண்டுகளாக, ஷாங்காய் எழுச்சியைச் செயல்படுத்தி, புதிய சர்வதேச உறவுகளை உருவாக்குவதிலும் மனித குலத்தின் பொது எதிர்காலத்தின் கட்டுமானத்தை முன்னேற்றுவதிலும் ஆய்வு செய்து வெற்றி அனுபவங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவு சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்பட்டுள்ளது.
உலகளாவிய ஆட்சிமுறை முன்மொழிவானது, நடப்பு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் முக்கிய சாதனையாக திகழ்வது மட்டுமல்லாமல், உலகளாவிய ஆட்சிமுறை அமைப்புமுறையின் சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டை சீனா முன்னேற்றுவதை வெளிப்படுத்தியுள்ளது. சீனா தனது ஞானம் மற்றும் செயல்களின் மூலம், பெரிய நாட்டின் பொறுப்புணர்வை மறுப்படியும் எடுத்துக்கூறியுள்ளது.