சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள ‘மேப்பிள் லீஃப் வில்லேஜ்’ எனும் ஸ்பா, அதன் விசித்திரமான குளியல் குளங்களுக்காகப் புகழ்பெற்று வருகிறது.
அங்குள்ள ஒரு குளம், உணவைச் சமைக்கும் ‘ஹாட் பாட்’ பாத்திரம் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் நிஜமான மிளகாய்கள் மற்றும் காய்கறிகள் போடப்பட்டு, தண்ணீர் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.
இதுதவிர, லட்சக்கணக்கான ‘ஆர்பீஸ்’ (Orbeez) மணிகள் நிரப்பப்பட்ட குளங்கள் மற்றும் கால்களில் உள்ள இறந்த செல்களை நீக்கும் மீன் குளங்களும் அங்கு உள்ளன. கடும் குளிரிலும் இதமான சுடுநீர் குளியலை வழங்கும் இந்த ஸ்பா-வில் ஒருமுறை குளிக்க சுமார் 2,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்த ஸ்பா-விற்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர், தனது அனுபவத்தைப் பகிரும்போது, “இது நான் பார்த்ததிலேயே மிகவும் விசித்திரமான இடம்” என்று குறிப்பிட்டுள்ளார். மிளகாய் கலந்த தண்ணீரில் குளிப்பது மட்டுமின்றி, மூலிகைகள் மற்றும் பூக்கள் கலந்த குளங்களும் அங்கு உடலைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. குளியலுக்குப் பிறகு ஓய்வெடுக்க தனி அறைகள் மற்றும் உணவுக்கூடங்களும் உள்ளன. குறைந்த விலையில் இவ்வளவு வித்தியாசமான வசதிகள் கிடைப்பதால், சமூக வலைதளங்களில் இந்த ஸ்பா குறித்த வீடியோக்கள் இப்போது செம வைரலாகி வருகின்றன.
