ஹுவாங் யன் தீவில் தேசிய நிலை இயற்கை புகலிடத்தை சீனா நிறுவுவதற்கு, ஃபிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியேன் செப்டம்பர் 11ம் நாள் கூறுகையில், ஹுவாங் யன் தீவு, சீனாவுக்குரிய உரிமை பிரதேசமாகும். அதில் தேசிய நிலை இயற்கை புகலிடத்தை நிறுவுவது, சீன இறையாண்மை விவகாரம். ஹுவாங் யன் தீவின் உயிரினச் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, இதற்கான காரணமாகும். ஃபிலிப்பைன்ஸ் உரிமை பிரதேசம், சர்வதேச ஒப்பந்தங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹுவாங் யன் தீவு, அதில் இல்லை. ஃபிலிப்பைன்ஸ், தொடர்புடைய உரிமை மீறல், ஆத்திரமூட்டல் மற்றும் பரப்புரை நடவடிக்கைகளை நிறுத்தி, கடல் நிலைமைக்கு சிக்கலான காரணியை ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்ததாகத் தெரிவித்தார்.