சிவகங்கையில் பாஜக தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரம்: திமுகவை கடுமையாக சாடும் பாஜக  

சிவகங்கையில் பாஜக பிரமுகர் ஒருவர் நேற்று இரவு ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதாக கூறி திமுக அரசை மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், அந்த கொலை அரசியல் பிரச்சனையால் நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
சிவகங்கை பாஜக மாவட்ட செயலாளராக இருந்த செல்வகுமார், நேற்று தனக்கு சொந்தமான செங்கல் சூளையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, தாக்கப்பட்டார்.

ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து, வெட்டி கொன்றது.
அந்த வழியாக சென்றவர்கள் செல்வகுமாரை ரத்த வெள்ளத்தில் பார்த்துவிட்டு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், செல்வகுமார் இறந்து கிடந்ததைக் கண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author