மாநில மற்றும் அமைச்சர் நிலை அதிகாரிகள், சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வின் எழுச்சியைக் கற்றுக்கொண்ட சிறப்பு வகுப்பு 23ஆம் நாள் மாலை நிறைவடைந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி செயலகத்தின் தலைவருமான சே ஜீ நிறைவு அப்போது அவர் கூறுகையில்,
இந்த வகுப்பு துவக்க விழாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளர் ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார். சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வின் நெடுநோக்கு திட்டத்தை பன்முகங்களிலும் ஆழமாகவும் சரியாகவும் புரிந்துணர்ந்து, செயல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அவர் ஆழமாக விளக்கினார். சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் பொருளாதார மற்றும் சமூகத்தின் தொடர்ச்சியான சுமுகமான வளர்ச்சிக்கு இது முக்கியதுவம் வாய்ந்தது. நாம் இவற்றை சீராக நடைமுறைப்படுத்தி, நம்பிக்கையை அதிகரித்து, பெரும் திட்டத்தை நனவாக்க வேண்டும் என்றார்.
