நவம்பர் 28ஆம் நாள் காலை, சின்ஜியாங்கின் யுதியன் மாவட்டத்தில் 50 மீட்டர் அகலம் மற்றும் 100 மீட்டர் நீளம் கொண்ட மணல் பரப்பளவில் மரக்கன்றுகளை நடவு செய்ததைத் தொடர்ந்து, தக்லிமகன் பாலைவனத்தைச் சுற்றி வரும் பசுமை சுவர் முழுமையாக உருவாக்கப்பட்டது.
இந்த பசுமை சுவரின் மொத்த நீளம் 3046 கிலோமீட்டரை எட்டியது. 2023ஆம் ஆண்டின் இறுதி வரை, தக்லிமகன் பாலைவனத்தைச் சுற்றி 2761 கிலோமீட்டர் நீளமான மணல் பரவல் தடுப்புக்கான பசுமை சுவர் உருவாக்கப்பட்டது. பாலைவனத்தின் தென் பக்கத்திலுள்ள மீதமுள்ள 285 கிலோமீட்டர் பகுதிகளில் மிக மோசமான சுற்றுச்சூழல் நிலவுகிறது.
3 லட்சத்து 37ஆயிரத்து 600 சதுரகிலோமீட்டர் பரப்புளவு கொண்ட தக்லிமகன் பாலைவனம், சீனாவில் மிகப் பெரிய பாலைவனமாகும். அதைச் சுற்றி நடக்கும் நிலையில் மொத்த நீளம் 3046 கிலோமீட்டராகும் என்பது குறிப்பிடத்தக்கது.