பராசக்திக்கு பின் நடிகர் அதர்வாவின் மிரட்டல் நடிப்பில் வலை

Estimated read time 0 min read

‘நான்’ பட புகழ் ஜீவா சங்கர் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள புதிய படத்தின் பெயர் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘வலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வெளியாகியுள்ள டீசரின் மூலம் இப்படத்தில் அதர்வா ‘குட்டி’ மற்றும் ‘சாரா’ என இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. டீசரில் இடம்பெற்றுள்ள, “பழிவாங்க முடிவு எடுத்துட்டா இரண்டு குழி வெட்டணும்; ஒன்று உங்க எதிரிக்கு, மற்றொன்று உங்களுக்கு” என்ற வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

கடற்கரை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் நடைபெறும் விறுவிறுப்பான சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதர்வாவுடன் ரூபா மஞ்சரி, வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முரளி ஷர்மா, ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், அர்ஜெய், அருள் டி. சங்கர், இமான் அண்ணாச்சி, துளசி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெப்சி வி.எஸ். பாலமுரளி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அதர்வா இரட்டை வேடத்தில் நடிப்பதாலும், ஜீவா சங்கரின் நேர்த்தியான இயக்கம் என்பதாலும் இணையதளங்களில் இந்த டீசரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author