ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM), அதன் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) துறையை மேம்படுத்துவதற்காக ரிலையன்ஸ் இன்டெலிஜென்ஸ் (Reliance Intelligence) என்ற புதிய துணை நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார்.
இந்த முயற்சி, ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய நிறுவனத்திற்கான நான்கு அம்சத் திட்டத்தை அம்பானி விளக்கினார்.
அவை அடுத்த தலைமுறை ஏஐ உள்கட்டமைப்பை உருவாக்குதல், உலகளாவிய கூட்டாண்மைகளை ஏற்படுத்துதல், இந்தியாவுக்கான ஏஐ சேவைகளை வழங்குதல் மற்றும் திறமைகளை வளர்த்தல் ஆகும்.
ஏஐ துறையில் களமிறங்க புதிய நிறுவனத்தைத் தொடங்கினார் முகேஷ் அம்பானி
