சீன வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் மா சோவு ஷூ, 10ஆம் நாள், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகிய இருவரும் புதுதில்லியில் புதிய சுற்று சீன-இந்திய நெடுநோக்குப் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
சர்வதேச நிலைமை, சொந்த நாட்டின் தூதாண்மை கொள்கை, பொது அக்கறை கொண்ட சர்வதேச பிரச்சினை, சீன-இந்திய தரப்புறவு முதலியவை குறித்து இரு தரப்பினரும் நட்பாகவும், நேர்மையாகவும், ஆழமாகவும் கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர்.
தற்போதைய சர்வதேச நிலைமை ஆழமாகவும் சிக்கலாகவும் மாறி வருகிறது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்திய தலைமையமைச்சர் மோடி ஆகிய இருவருக்கிடையில் எட்டப்பட்டுள்ள முக்கிய பொதுக் கருத்துகளை உணர்வுபூர்வமாக நடைமுறைப்படுத்தி, நெடுநோக்கு பார்வை ரீதியில் சீன-இந்திய உறவைக் கையாள வேண்டும். சீனாவும் இந்தியாவும் ஒத்துழைப்புக் கூட்டாளியுறவுகளாகவும் உள்ளன. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று போட்டியிடும் நாடுகள் அல்ல. கூட்டு நம்பிக்கையை வலுப்படுத்தி ஒத்துழைப்புகளை விரிவாக்கி, சர்ச்சையை சீராக கையாண்டு, இரு தரப்புறவை சீரான, நிதானமான பாதையில் கொண்டு செல்வதை விரைவுபடுத்த வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
