அக்கவுண்டில் ரூ. 5,000 வரவில்லையா?… வட்டாட்சியர் அலுவலகம் போகும் முன் இதை படியுங்கள்… அரசு வெளியிட்ட புதிய வழிமுறை…!!! 

Estimated read time 0 min read

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்குப் பிப்ரவரி மாதத்துடன் சேர்த்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் 5,000 ரூபாய் ஒரே தவணையாக வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் உரிமைத் தொகை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெற்று வந்த சுமார் 1.31 கோடிப் பெண்களுக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக உரிமைத் தொகை பெற்று வரும் ஒரு சில பயனாளிகளுக்கு மட்டும் இன்னும் வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்றால் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

அத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை நேரடியாக அணுகி மனு அளிக்கலாம் அல்லது என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும் புகார்களைப் பதிவு செய்யலாம்.

இதன் மூலம் வங்கி கணக்கு விபரங்களில் ஏதேனும் குளறுபடி இருந்தால் அவற்றைச் சரிசெய்து விடுபட்ட தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author