நாமக்கல் : இன்று செப்டம்பர் 27, 2025 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். இதில், நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் 17 நிமிடத்தில் பரப்புரையை நிறைவு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ”மூச்சுக்கு 300 தடவ அம்மா, அம்மானு சொல்லிக்கிட்டு, ஜெயலலிதா மேடம் சொன்ன விசயத்த டோட்டலா மறந்துட்டு, பொருந்தாக் கூட்டணி அமைச்சுக்கிட்டு, கேட்டா தமிழ்நாட்டு நலனுக்காக இந்த கூட்டணினு சொல்றாங்களே, அவங்களைமாதிரி நாங்க இருக்க மாட்டோம்.
“பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்துவிட்டார்கள்?” அப்புறம் எதற்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று நான் கேட்கவில்லை; புரட்சித்தலைவரின் தொண்டர்கள் கேட்கின்றனர். பாஜக – அதிமுக பொருந்தாக் கூட்டணி, இவர்கள் நேரடி உறவுக்காரர்கள். தமிழ்நாட்டிற்கு தேவையானவற்றை பாஜக சரியாகச் செய்து விட்டார்களா? பிறகு எதற்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி? நான் கேட்கவில்லை. எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கிறார்கள்.
அதிமுக பாஜக கூட்டணி மீது மக்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லையென்று எல்லோருக்கும் தெரியும். அதேசமயம் திமுக குடும்பம், பாஜகவோடு மறைமுக உறவுக்காரராக இருக்காங்க என்பதை தயவு செய்து மறந்துடாதீங்க.. வரும் தேர்தலில் நீங்க திமுகவுக்கு ஓட்டு போட்டால், அது பாஜகவிற்கு ஓட்டு போட்ட மாதிரி” என மாத்தி மதி விமர்சனம் செய்தார்.