சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும், சீன அரசவையும் 14ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், 2026ஆம் குதிரை ஆண்டின் வசந்த விழா வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தின.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் இதில் உரைநிகழ்த்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி மற்றும் சீன அரசவையின் சார்பில், சீனாவின் பல்வேறு தேசிய இனத்தவர்கள், ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசங்களின் உடன்பிறப்புகள், தைவான் உடன்பிறப்புகள், வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் முதலியோருக்கு ஷிச்சின்பிங் வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதில் அவர் மேலும் கூறுகையில்,
சீனாவின் பாரம்பரிய பாம்பு ஆண்டு விரைவில் நிறைவடைய உள்ளது. அவ்வாண்டில் இன்னல்களைக் கடந்து அறைகூவல்களைச் சமாளித்து முன்னேறி, கட்சி மற்றும் நாட்டு விவகாரங்கள் புதிய முன்னேற்றச் சாதனைகளைப் பெற்றுள்ளோம் என்றார்.
ஷிச்சின்பிங் மேலும் கூறுகையில்,
2026ஆம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 105ஆவது ஆண்டு நிறைவாகவும் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க ஆண்டாகவும் விளங்குகிறது. புதிய வளர்ச்சி கட்டமைப்பை விரைவுபடுத்தி, உயர் தரமுள்ள வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றி, சமூகத்தின் இணக்கத்தையும் நிதானத்தையும் உறுதிப்படுத்தி, கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் எப்போதும் வலுப்படுத்தி, 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் சிறப்பான துவக்கத்தை நனவாக்க வேண்டும் என்றார்.
