சீன-ஜெர்மனி-பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

Estimated read time 1 min read

பிப்ரவரி 13ம் நாள் ஜெர்மனியின் மியுனிச் நகரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் வாடெஃபுல்(Wadephul), பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பாரொட்(Barrot)ஆகியோர் சந்திப்பு நடத்தினர்.

வாங்யீ அப்போது கூறுகையில், சீனா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸின் வெளியுறவு அமைச்சர்களின் 3 தரப்புகள் சந்திப்பு முதன்முறையாக நடைபெற்றது. காலத்தின் மாற்றத்தைச் சமாளிக்கும் செயலாகவும், நெடுநோக்கு தொடர்பை மேற்கொள்ளும் முக்கிய வாய்ப்பாகவும் இது அமைந்துள்ளது. ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் நலன் தந்து, கூட்டு வெற்றி கொடுக்கும் ஒத்துழைப்பை முன்னெடுத்து, சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சிக்குத் திசையைக் காட்டி, மாற்றம் மற்றும் கொந்தளிப்பு கலக்கும் சர்வதேச நிலைமைக்கு மேலதிக நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை நாங்கள் ஊட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

வாடெஃபுல் கூறுகையில், சர்வதேச விவகாரங்களில் சீனாவின் ஆக்கமுள்ள பங்கிற்கு ஜெர்மனி முக்கியத்துவம் அளிக்கிறது. சீனாவுடன் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஜெர்மனி விரும்புவதாக தெரிவித்தார்.

பாரொட் கூறுகையில், உலகின் அமைதி முன்னெடுப்பு, உலகளாவிய நிர்வாக மேம்பாடு ஆகியவற்றுக்கு 3 நாடுகள் பங்காற்ற வேண்டும். சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பலதரப்புவாதம் மற்றும் தாராள வர்த்தகத்தைப் பேணிக்காக்க பிரான்ஸ் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இதனிடையில் மியுனிச் பயணத்தின் போது வாங்யீ, பிரிட்டனின் வெளியுறவு அமைச்சரையும் சந்தித்துப் பேசினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author