3ஆவது சீனச் சர்வதேச விநியோகச் சங்கிலி பொருட்காட்சி 20ஆம் நாள் நிறைவடைந்தது. இதில் பங்கெடுத்த ஹனிவெல், லூயிஸ் ட்ரெய்பஸ், கார்னிங், வாக்கர் கெமி உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவின் வலுவான விநியோகச் சங்கிலியை வெகுவாக மதிப்பிட்டுள்ளன. சீனாவில் தொடர்ந்து தொழில்களை வளர்த்து, சீனா மற்றும் உலகளவிலான விநியோக வணிகர்களுடன் சேர்ந்து விநியோகச் சங்கிலியை மேம்படுத்தப் பாடுபடும் என்றும் அவை தெரிவித்தன.
அமெரிக்காவின் ஹனிவெல் நிறுவனத்தின் சீனா பிரிவு இயக்குநர் யூ ஃபங் செய்தியாளரிடம் கூறுகையில்,
சீனாவில் வலுவான விநியோகச் சங்கிலியின் பயனாக, எங்கள் உற்பத்திப் பொருட்கள் தொடர்ச்சியாக மேம்பட்டு வருகின்றன. உற்பத்திக்கான தேவை, ஆய்வு மற்றும் வளர்ச்சி, தயாரிப்பு ஆகிய துறைகள் இங்கே நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஒரு மணி நேரத்துக்குள் பல தலைசிறந்த முகவர்களைக் கண்டுபிடிக்கலாம் என்று கூறினார்.