கொழும்பில் சீனத் தூதரகம் நடத்திய வசந்த விழா விருந்து

Estimated read time 1 min read

இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் அண்மையில் 2026ம் ஆண்டின் வசந்த விழா சிறப்பு விருந்தை நடத்தியது. இலங்கையின் அரசியல் அதிகாரிகள், பல்வேறு வட்டாரத்தினர்கள், இலங்கையிலுள்ள சீனர்கள் உள்ளிட்ட சுமார் 700 பேர் இதில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். இலங்கைக்கான சீனத் தூதர் ஜி ச்சேன் ஹூங் இவ்விருந்தில் உரை நிகழ்த்தினார்.

வசந்த விழா வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், சீன-இலங்கை உறவு சீராக வளர்ந்து வருகிறது. இலங்கையிலுள்ள சீனர்கள் அனைவரும், இரு நாட்டின் ஒத்துழைப்பை முன்னேற்றுபவர், சீனப் பண்பாட்டைப் பரவல் செய்பவர் மற்றும் அரசு சாரா நட்பை முன்னெடுப்பவராகச் செயல்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

அவ்விருந்தில் சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பரவல் காணொளி, ஒளிப்பரப்பப்பட்டது. ஈர்ப்பாற்றல் மிக்க சீனப் பண்பாடு, பாரம்பரியத்தை நவீனமயமாக்கத்துடன் இணைத்த கலை நிகழ்ச்சிகள் ஆகியவை விருந்தினர்களைப் பெரிதும் வசீகரித்தன.

 

You May Also Like

More From Author