ஆகஸ்ட் 4ஆம் நாள் 18:21 மணிக்கு ஹைனான் வணிக விண்வெளி ஏவு மையத்தில், லாங்மார்ச்-12 ஏவூர்தியின் மூலம், செயற்கைக்கோள் இணைய சேவைக்கான தாழ் வட்டப்பாதை 7ஆவது தொகுதி செயற்கைக்கோளைச் சீனா வெற்றிகரமாக ஏவியது. இச்செயற்கைக்கோள்கள் திட்டமிடப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததுடன், இம்முறை ஏவுதல் பணி முழுமையாக வெற்றிப் பெற்றது.
இது, லாங்மார்ச் ஏவூர்தி தொடரின் 587வது ஏவுதல் பணியாகும்.
