சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் டிங்ரி பகுதியில் நிலநடுக்கப் பேரிடர் மீட்புதவி மற்றும் நிவாரணப் பணிகளை ஏற்பாடு செய்வது குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் நிலைக்குழு 9ஆம் நாள் வியாழக்கிழமை கூட்டம் நடத்தியது.
டிங்ரி பகுதியில் ரிக்டர் அளவிலான 6.8ஆகப் பதிவான கடும் நிலநடுக்க ஏற்பட்ட பிறகு, மீடபுதவிப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரிடர் நிவாரணப் பணிகள் தற்போது முக்கிய காலக்கட்டத்தில் உள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்து, பேரிடருக்கு பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பான வாழ்க்கை மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை கூடிய விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.